கோவையில் உயிரிழந்த மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டி இஸ்லாமிய ஆண்கள் மற்றும் பெண்கள் 300க்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகை.. - தமிழக குரல் - திருவாரூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 28 May 2026

கோவையில் உயிரிழந்த மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டி இஸ்லாமிய ஆண்கள் மற்றும் பெண்கள் 300க்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகை..

 


இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை தியாகம் செய்யத் துணிந்த இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகை கொண்டாடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் அரசு பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் வடக்கு மாவட்ட தலைவர் அப்துல் காதர் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாமிய பெண்கள் குழந்தைகள் புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் அன்பை தெரிவித்துக் கொண்டனர். அதனை தொடர்ந்து கோவையில் உயிரிழந்த மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டி சிறப்பு தொழுகையில் இஸ்லாமிய பெண்கள் ஈடுபட்டனர் . கோவை மாணவி படுகொலைக்கு காரணமானவர்களுக்கு மரண தண்டணை வழங்க வேண்டும் என தெரிவித்தனர். 


No comments:

Post a Comment

Post Top Ad